Total Pageviews

Sunday, November 27, 2011

கை மேல் ஒரு பலன


ண்களில் ஒரு வித மிரட்சியுடன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தாள் பவித்ரா. முந்தின நாள் ஒரு கல்லூரி மாணவன் தன் நண்பனிடம் சவால் விட்டுவிட்டுப் போயிருந்ததே அவளின் மிரட்சிக்குக் காரணம்.

தினமும் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே பெண்கள் மேல் விழுந்துவிட்டு 'சாரி' சொல்வதும், புடவைத் தலைப்பை இழுப்பதும், முதுகில் கையை படரவிடுவதும், ஃ பிளையிங் கிஸ் கொடுப்பதும்.. நினைக்க நினைக்க அவள் முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பத் தொடங்கின. முந்தின நாள் ஒரு படி மேலே போய் "நாளைக்கு பஸ்ஸிலிருந்து இறங்கறப்ப இவங்க இடுப்பைக் கிள்ளி விட்டு இறங்கலேன்னா என் பெயரை மாத்திக்கறேன்டா" என்று அவள் காது படவே சொல்லிவிட்டுப் போயிருந்தான் அந்தக் கல்லூரி மாணவன்.

அவன் வந்திருக்கிறானா என்று பஸ்ஸினுள் ஒரு நோட்டம் விட்டாள். சவால் விட்ட ஃபங்க் தலையன் அவள் பக்கத்தில் நின்று கொண்டு அவளையும் அவள் மடியையும் வெறித்துப் பார்ப்பதை கவனித்தாள்.

பஸ் அடுத்த ஸ்டாப்பிங்கை நெருங்கும் சமயம் "டேய் நல்ல வேளை இன்னிக்காவது தெரிஞ்சுதே! இல்லேன்னா நேத்து போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக இடுப்பைக் கிள்ளிட்டு இந்நேரம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பேன். இவ்வளவு நாளா எப்படிடா நாம பண்ணின சில்மிஷங்களை பொருத்துகிட்டிருந்தாங்க?"

நண்பனிடம் கூறிவிட்டு அந்த ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்விட்டான் அந்த ஃபங்க் தலையன். அவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் இறங்கிவிட்டான்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் "ரொம்ப தாங்க்ஸ்" என்றவாறே பவித்ராவிடம் கொடுத்து வைத்திருந்த தன் யூனிபார்மை வாங்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கிப் போனார் ஒரு பெண்மணி.

ஒரு பெண் போலீஸின் கையில் வைத்திருந்த போலீஸ் யூனிபார்மை வாங்கி தன் மடியில் வைத்திருந்ததற்கு இப்படி கை மேல் ஒரு பலனா?

நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் பவித்ரா.

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...