Total Pageviews

Tuesday, November 22, 2011

கல்யாணத்துக்கு ஏன் உன் மனைவி வரலை?

என்னங்க இது... திடீர்னு இப்படிச் சொன்னா எப்படி? நேத்து வரை ஜனார்த்தனன் பொண்ணு கல்யாணத்துக்கு நாம ரெண்டு பெறும் போகிறதாதானே இருந்தது? இப்ப திடீர்னு நீங்க மட்டும் போறதா சொல்றீங்களே?" ஏமாற்றத்துடன் கணவன் கணேசனிடம் கேட்டாள்.


"இல்ல மீனா, எனக்கு மதுரைல திடீர்னு இன்ஸ்பெக் ஷன் போட்டுட்டாங்க. கல்யாணத்துல தலைய காட்டிட்டு அப்படியே டிரெயின் எறிடறேன்!"


"என்னமோ போங்க. கல்யாணத்துக்குன்னு புதுசா புடவைலேர்ந்து சகலமும் வாங்கியிருந்தேன். ம்... ஏமாற்றத்துடன் சமையலறைக்குள் புகுந்தாள் மீனாட்சி.


திருமண மண்டபத்தில்...


"என்னடா நீ மட்டும் வந்திருக்க? உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே?" கேட்ட ஜனார்த்தனனை ஓரமாக அழைத்துச் சென்றான் கணேசன்.


"பத்து நாளைக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்திருந்தப்ப என்ன சொன்ன? உன் பெண்ணுக்கு சீர் கொடுக்கப் போற பீரோ,கட்டில்,மெத்தை,மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், வாஷிங்மெஷின், பாத்திரங்கள்,புத்தம் புது கார்... எல்லாத்தையும் கல்யாண மண்டபத்துல காட்சிக்கு வைக்கப் போறேன்னு சொன்னல்ல? அதனாலதான் என் பெண்டாட்டிய கூட்டிட்டு வரலை..."


"என்னடா சொல்ற?"


"பின்னே என்னடா... என் பையனுக்கு வரன் பேசி முடிச்சிருக்கேன். சீர் பத்தி பேச அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போறோம். இந்த நேரத்துல நீ ஷோவுக்கு வச்சிருக்கற சீரை என் பெண்டாட்டி பார்த்தா, அவளுக்கும் இதெல்லாம் வேணும்னு ஆசை வந்துடாதா? அதனாலதான் அவள கூட்டிட்டு வரலை!" என்றான் கணேசன்.




"சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும்! பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும்

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...